தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கீழரத வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுபவர் கனகசபாபதி. இவர் நேற்று காலை தனது ஸ்கூட்டரை நிதி நிறுவனத்தின் வாசலில் நிறுத்தியிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் பாம்பு இருப்பதைப் பார்த்த அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
திருச்செந்தூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் மோகன், வீரர்கள் வீரசெல்வன், விநாயகமூர்த்தி, சுதாகர், அகஸ்தின் உள்ளிட்டோர் சுமார் அரை மணி நேரம் போராடி, ஸ்கூட்டருக்குள் இருந்த பாம்பை வெளியே எடுத்தனர். சுமார் 2 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்த அந்த பாம்பை, ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர்.