4 பேர் வேட்புமனு வாபஸ்: சுயேச்சைகளுக்குசின்னங்கள்ஒதுக்கீடு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் மொத்தம் 188 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பரிசீலனைக்குப் பிறகு, 56 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 117 பேர் தகுதி பெற்றுள்ளனர். தொகுதி வாரியாக, விளாத்திகுளம் தொகுதியில் 18, தூத்துக்குடியில் 22, திருச்செந்தூரில் 14, ஸ்ரீவைகுண்டத்தில் 19, ஒட்டப்பிடாரத்தில் 21, கோவில்பட்டியில் 23 வேட்புமனுக்கள் தகுதி பெற்றுள்ளன. இதுவரை 4 பேர் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இன்று மாலை 3 மணிக்குப் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி