கயத்தாறில் பூட்டியிருந்த வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7,000 பணத்தைத் திருடிச் சென்றனர். இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் பேச்சியம்மாள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.