தூத்துக்குடி: போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளில் தொடர்புடைய முருகேசன் (59), இசக்கிராஜா (22), கோபால்சாமி (47) ஆகிய மூவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில், மூவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 25 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி