தூத்துக்குடி சாயர்புரம் அருகே நடுவக்குறிச்சி பரிசுத்த மிக்காயேல் ஆலயத்தில் நடைபெற்ற நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் தேர்தலில், 200க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தேர்தல் நிறுத்தப்பட்டு, வாக்குரிமை பறிக்கப்பட்டதாகக் கூறி ஒருவர் பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் நிலவியது. காவல்துறையினர் தலையிட்டு பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.