தாமிரபரணி ஆற்றின் 150 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை பாலம் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. வடக்கு பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து காணப்படுவதால், பாலம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் இந்தப் பாலத்தின் பராமரிப்பு இல்லாதது குறித்து மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அசம்பாவிதம் நிகழும் முன் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.