ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் 11ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் இருந்து சுமார் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆற்றுப் படுகையில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி