தூத்துக்குடியில் செல்போன் திருடி விற்பனை செய்து வந்த அஜய்(எ) ஜப்பான் என்ற இளைஞரை, பண தகராறில் நண்பர்களான ராஜா மற்றும் பரமசிவம் ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.