கோவில்பட்டி: மது குடித்ததைக் கண்டித்ததால் வாலிபர் கொலை; மூவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தில் கட்டிடத் தொழிலாளி கார்த்திக் (28) முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். சம்பவத்தன்று மது அருந்தியதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், அசோக் குமார், முனியசாமி ஆகிய மூவரும் கார்த்திக்கை தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கு போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி