தூத்துக்குடியில் மது குடிப்பதை மனைவி கண்டித்தால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அருகே உள்ள மேலதட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் அருண்பாலாஜி (36), இவர் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி சந்தனமாரி கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த அருண்பாலாஜி நேற்று முன்தினம் (ஜனவரி 10) தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து தட்டப்பாறை காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.