தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். முதல் கட்டமாக 1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணி நடந்து முடிவடையும் நிலையில் உள்ளது. இங்கு V7, V6 ஆகிய இரண்டு வகை கார்கள் தயாரிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் அமையும் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை ஜூலை மாதத்தில் மின்சார கார் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் உற்பத்தியாகும் கார்களை மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடி ஆலை அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் தற்போது கார்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு இந்த மாதம் துவங்குள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.