தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது பொட்டலூரணி விளக்கு, வாகைகுளம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி, பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கினர். இருப்பினும், இந்த மழை மானாவாரி விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.