கிராம உதவியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள், டி பிரிவு ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்கள் நிரப்புதல், கருணை அடிப்படையில் பணி வழங்குதல், அரசாணை 33 திருத்தம் போன்ற கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளதால், வருவாய் துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி