தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் இன்று நடைபெற்ற வ. உ. சி. யின் படைப்பும் பதிப்பும், பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியிடுதல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத் கலந்துகொண்டு, "வ. உ. சி. யின் படைப்பும் பதிப்பும்" என்ற புத்தகத்தினை வெளியிட்டார். இந்த நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். வ. உ. சிதம்பரனாரின் படைப்புகள் மற்றும் அதன் பதிப்புகள் குறித்த சிறப்புரைகளும் இடம்பெற்றன.