தூத்துக்குடியில் பங்குச் சந்தை முதலீட்டில் அதிக லாபம் என ஃபேஸ்புக் விளம்பரம் மூலம் இளைஞரை தொடர்பு கொண்டு, வாட்ஸ்அப் குழுவில் இணைத்து, டிரேடிங் செயலி மூலம் முதலீடு செய்ய ஆசை வார்த்தை கூறி ரூ. 85 லட்சம் மோசடி செய்த வழக்கில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்திப் சயாஜி ரொகோகலே மற்றும் சோபன் டட்டு முஞ்சல் ஆகிய இருவரை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கடந்த 19.11.2025 அன்று கைது செய்து தூத்துக்குடி அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.