தூத்துக்குடி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி.. மாநில அளவில் 9வது இடம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 21,762 மாணவர்களில் 21,022 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 96.60% தேர்ச்சி விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் மாவட்டம் 9வது இடத்தையும், அரசு பள்ளிகளில் 6வது இடத்தையும் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 308 பள்ளிகளில் 159 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் 89 பள்ளிகளில் 40 பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்து தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி