இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தூத்துக்குடி புதுக்கோட்டையில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி அலுவலர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் ரமணாவை முற்றுகைக்கு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு உத்தரவின்படி அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கல்வி அதிகாரி இன்னும் இரண்டு வாரத்தில் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இரவு நேரத்தில் சுமார் 4 மணி நேரம் ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.