தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்தல், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அலுவலர் அளவர் பதவி வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைதல், புற ஆதார முறையில் உரிமம் பெற்ற நில அளவர் நியமனத்தை கைவிடுதல், உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கைகளை கைவிடுதல், காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமனம் செய்தல், நீதிமன்ற பயிற்சி வழங்குதல், புதிய நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்குதல், SCRC க்கு ஒப்படைக்கப்பட்ட சார் ஆய்வாளர் பணியிடங்களை மீண்டும் வழங்குதல் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

தொடர்புடைய செய்தி