தூத்துக்குடி: குடித்துவிட்டு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது மீன்பிடி படகில் சுற்றுலா சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பொங்கலை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி படகில் சுற்றுலா சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட சுற்றுலா படகு சேவையில் நிர்ணயிக்கப்பட்ட பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். 

கூடுதலாக ஆட்களை ஏற்றக்கூடாது. பொங்கல் பண்டிகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் பகுதியில் மட்டும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 75 வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் யாராவது குடித்துவிட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ‌

தொடர்புடைய செய்தி