தூத்துக்குடி: தொழில் கடன் சிறப்பு முகாம்..ஆட்சியர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் வருகின்ற 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நிதியாண்டு 2025-26ல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தகுதி பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியமாக ரூ. 150 இலட்சங்கள் வரையும், உற்பத்திச் சார்ந்த குறுந்தொழில்களுக்கு தமிழக அரசின் மூலதன மானியமாக 25 சதவீதமும், கூடுதல் மானியமாக 10 சதவீதமும் மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு 5 சதவீத சிறப்பு மானியமாக வழங்கப்படுகிறது. 

இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகைதந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0461-3500032 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி