தூத்துக்குடி: மது பாட்டில் கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்த நபர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன், டாஸ்மாக் கடைகளில் மருத்துவர் சான்றிதழுடன் குறைந்த அளவு மது வழங்க வலியுறுத்தி உடலில் மது பாட்டில்களை கட்டிக்கொண்டு வந்து போராட்டம் நடத்தினார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி, பாட்டில்களை அகற்றிய பின் மனு அளிக்க அனுமதித்தனர்.

தொடர்புடைய செய்தி