தூத்துக்குடி: பாம்பு படையெடுப்பு; பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கரபேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 3வது தெரு பகுதியில் நேற்று (ஜூன் 4)  இரவு 7 மணி அளவில் ஏழு அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று தெருவில் சென்றுள்ளது. இதைக்கண்ட அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். சிலர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

இதைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் அந்த நல்ல பாம்பை ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி லாவகமாக பிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த நல்ல பாம்பை வனத்துறைக்கு தீயணைப்புத்துறையினர் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த பாம்பை வல்லநாடு மலைப்பகுதியில் விட்டனர். தங்கள் தெருவில் திடீரென பாம்பு வந்ததைக் கண்ட மக்கள் உடனே தீயணைப்புத்துறையினர் பிடித்துச் சென்றதால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தொடர்புடைய செய்தி