தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் ஸ்ரீவீரசக்க தேவி திருவிழா மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா வரும் 8ஆம் மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் ஏதுமின்றி விழா அமைதியாக நடைபெறுவதற்காக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 10ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி