தூத்துக்குடி: ரூ. 16 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி அருகே, தடை செய்யப்பட்ட பீடி இலைகளை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த வாலிபரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். வாகன தணிக்கையின் போது, 52 பண்டல் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.16 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி