தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன்பு, தேர்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்றாததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021 தேர்தலில் பணி நிரந்தரம் செய்வதாக திமுக வாக்குறுதி அளித்தும் ஐந்து ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் பணிபுரியும் சுமார் 20,000 ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஒப்படைப்பதாகவும் எச்சரித்தனர்.