குறிப்பாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக உள்ளன. இதனை பொருட்படுத்தாமல் அரசு எடுக்கவில்லை. யாரும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. இவ்வாறு போனால் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறிவிடும். உலக நாடுகள் இவ்வாறு பேச ஆரம்பித்து விடுவார்கள். தமிழ்நாட்டுக்கு வர பயப்படுவார்கள்.
இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு: நரேந்திர மோடி ஆளுமைக்கு கீழ் வந்த பின்பு தான் கொலைகள் நடப்பது இல்லாமல் போனது. தமிழக அரசு மீனவர்கள் பிரச்னையை கனிவுடன் அணுக வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் என்று சொன்னால் இலங்கைக்கும் பாதிப்பு நமக்கும் பாதிப்பு என்றார்.