தூத்துக்குடி: சாலையை சீரமைத்த காவல்துறையினர்: பொதுமக்கள் பாராட்டு

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சாலையை சீரமைத்த காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலை அய்யன் கோவில் அருகே உள்ள அம்மன் கோவில் முன்பு மழையால் பாதிக்கப்பட்டு சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டது. 

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு முத்தையாபுரம் காவல் துறையினர் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்து சாலையை சீர் செய்தனர். சம்பவத்தை கேள்விப்பட்ட ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சிஐடி ஜான்சன், தலைமை காவலர்கள் கோபி தில்லா, சிவபெருமாள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். சாலையை காவல்துறையினர் சீரமைத்தது முத்தையாபுரம் மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி