தூத்துக்குடி: பெட்ரோல் பங்க் சேதம் – கும்பல் அட்டகாசம்

தூத்துக்குடி அருகே அரசடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் சிறுநீர் கழித்ததை தட்டி கேட்ட ஊழியர்களிடம் முதலில் தகராறு செய்த மூவர், பின்னர் மது மற்றும் கஞ்சா போதையில் சுமார் 10 பேருடன் திரும்பி வந்து கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் ஊழியர்களை தாக்கி, அலுவலகம் மற்றும் பெட்ரோல் பங்க் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி