மாப்பிள்ளையூரணி பகுங மழை நீர் தேங்காமல் நிரந்தர தீர்வு!

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியை ஊரக வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது. கூடுதல் ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஐஸ்வர்யா இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழையால் தேங்கியுள்ள நீரை மின்மோட்டார் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், இரண்டு தினங்களில் மழை நீர் முழுவதும் அகற்றப்படும் என்றும், சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி