இத்தகைய சிறப்பு வாய்ந்த பனை மரங்களை தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பனை மர விதைகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள வீகேன் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து தூத்துக்குடி மாநகர சுற்றியுள்ள தருவைகுளம் திருச்செந்தூர் ரவுண்டானா அத்திமரப்பட்டி கோரம்பள்ளம் குளக்கரை பகுதி முள்ளக்காடு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 50 பனை மர விதைகள் நடப்பட்டுள்ளன
கோரம்பள்ளம் குளக்கரை பகுதியில் இந்த பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.