சங்கரலிங்கபுரம் அருகே, கச்சேரி பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த குணசேகரன் (45) என்பவர், சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற வாகனத்தைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.