தூத்துக்குடி கலெக்டர் ஊக்கமளிக்கும் பேச்சு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்வமுடன் பயின்று 2024-25ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், கலந்துரையாடி, தொழிற்கல்வி படிப்புகள், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள், தொழில்நுட்பக் கல்வி, தொழிற்பயிற்சி கல்வி படிப்புகள், கல்லூரிகள் தேர்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தெரிவித்ததாவது: மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'பெரிதினும் பெரிது கேள்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி