தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கான "உன்னால் முடியும்" என்னும் பொதுத்தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி மற்றும் சிறப்பு நீட் மாதிரித் தேர்வு வருகிற ஜன. 5ஆம் தேதி மற்றும் ஏப். 6ஆம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை வ. உ. சிதம்பரம் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பது எப்படி? தேர்வுத் திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி? புரியாத பாடங்களை படிப்பது எப்படி? தேர்வு பயத்தை போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுதுவது எப்படி? என்பது குறித்து பயிற்சி விளக்கம் அளிக்கப்படும். அனுமதி இலவசம். மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இந்தநிகழ்ச்சில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் https://forms.gle/TRjMnFKUYMtSjjMH9 என்ற இணைப்பில் தங்கள் விபரங்களை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும் ஸ்டீபன் பிச்சைமணி - 98406 80473, சுந்தர்ராஜ் - 98436 59985 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.