தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலியான வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, பொதுமக்களிடம் பண மோசடி செய்ய முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனுஜ் குமார் (21) என்பவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தொழில்நுட்ப விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.