தூத்துக்குடியில் கார்த்திகை மாதத்தின் முதல் நாள் இன்று பிறந்தது. இதனையொட்டி, பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை முதலே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கருப்பு மற்றும் ஊதா நிற ஆடைகளை அணிந்து, துளசி மற்றும் ருத்ராட்ச மாலைகளை அணிந்து விரதத்தை தொடங்கினர். விநாயகர் மற்றும் சங்கர ராமேஸ்வரர் சன்னதி முன்பு மாலை அணிந்த பக்தர்கள், 'சரணம் ஐயப்பா கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா' என வேண்டி விரதத்தை தொடங்கினர். மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், 21, 30, 45 அல்லது 60 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க செல்வார்கள். இதனால், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.