"பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" (Beti Bachao Beti Padhao) திட்டத்தின் கீழ் குழந்தை திருமணத் தடுப்பு, இளம் வயது கர்ப்பம், இணைய மிரட்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் ஆகியவற்றை மையப் பொருளாகக் கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள், பள்ளி (ம) கல்லூரி மாணவ மாணவிகள் என எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 3 குறும்படங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தனது சொந்த குறும்படங்களை மட்டுமே அனுப்ப வேண்டும்.