தூத்துக்குடி மாநகராட்சி, முத்தம்மாள் காலணியில் உள்ள வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிம வள நிதியின் கீழ் ரூ. 100 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள், பராமரிப்பு மற்றும் சுற்றுச்சுவர் பணிகள் இன்று (07.11.2025) திறக்கப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு கல்வெட்டினை திறந்து வைத்தனர். மேயர் பெஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ. எம்.சி. சண்முகையா மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.