கடத்தப்பட்ட5 மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்கனிமொழி கோரிக்கை

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் பணிக்காக இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்னுதுரை, புதியவன், பேச்சிமுத்து மற்றும் தென்காசியைச் சேர்ந்த இசக்கிராஜா, தளபதி சுரேஷ் ஆகிய ஐந்து தமிழர்கள் கடந்த 6ம் தேதி ஆயுத கும்பலால் கடத்தப்பட்டனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி, வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாக தலையிட்டு, மாலி அரசாங்கத்துடன் இணைந்து கடத்தப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டு நாடு திரும்பச் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி