அரசு ஊழியரின் வீட்டில் நகை, பணம் கொள்ளை

தூத்துக்குடியில் அரசு ஊழியா் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை சிப்காட் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சோ்ந்தவா் ஆண்டி மகன் செல்வகணபதி (48). இவா் தூத்துக்குடி வருமானவரி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறாா். கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளத்தில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டாா். நேற்று (செப்.,30) காலையில் வீட்டுக்கு திரும்பிவந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம்.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த சுமாா் 3 பவுன் நகைகள், ரூ. 21 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி