கொலை குற்ற வழக்குகள்: (Murder Case) தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு (2024) காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் கொலை குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. அதன்படி கடந்த 2023 ஆண்டுடன் ஒப்பிடும்போது 6% கொலை வழக்குகள் குறைவாகவும், 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 18% குறைவாகவும் பதிவாகியுள்ளது.
காய வழக்குகள் (Hurt Case): மேலும் காயவழக்குகளில் இந்த ஆண்டுடன் கடந்த 2023ம் வருடத்தை ஒப்பிடும்போது 2024ம் ஆண்டு 34% கொடுங்காய வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. போக்சோ வழக்கு தீர்ப்புகள் (Pocso Conviction): அதே போன்று போக்சோ வழக்குகளில் தண்டனை விகிதம் கடந்த 2023 ஆண்டு 10% ஆக தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் 25% தீர்ப்புகள் அதிகரித்துள்ளது.
கொலை வழக்கு தீர்ப்புகள் (Murder Case Conviction): தண்டனை விகிதம் கடந்த 2023 ஆண்டு 7% ஆக தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் 2024ம் ஆண்டு காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 50% ஆக தீர்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.