சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்வுக்கு இலவச பயிற்சி:

தூத்துக்குடி மாவட்டத்தில், தாட்கோ நிறுவனம் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்விற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு பயில உதவும். ஆர்வமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி