தூத்துக்குடி: பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் இருந்து செயல்பட்டு வரும் பிளாக் பாரஸ்ட் என்ற தனியார் பேக்கரியில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய கேக்கில் முட்டை ஓடுகள் மற்றும் தலைமுடி ஆகியவை இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள பிளாக் பாரஸ்ட் என்ற தனியார் நிறுவனத்தின் கேக் ஷாப்பில் இன்று காலை தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்த மோகலிங்கம் என்ற இளைஞர் தனது வீட்டில் உள்ள சகோதரியின் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக ஆறு பிளம் கேக்குகளை வாங்கி சென்றுள்ளார். 

பின்னர் வீட்டிற்கு சென்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக கேக்கை எடுத்த போது அதில் ஒரு கேக்கிற்குள் முட்டை ஓடும் மற்றொரு கேக்கிற்குள் நீண்ட தலைமுடியும் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து மோகலிங்கம் பிளாக் பாரஸ்ட் கேக் ஷாப்பிற்கு சென்று இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். ஆனால் நிர்வாகம் முறையாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மோகலிங்கம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிளாக் பாரஸ்ட் கேக் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி