பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்துகளில் இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் க. இளம்பரவதி பயனாளிகளுக்கு வழங்கினார்.