மகளின் குடும்ப பிரச்சனையால் தந்தை விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடியில் மகளின் திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டதால் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை திருமலைபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (52). இவரது மகள் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் தந்தை வீட்டுக்கு வந்து விட்டாராம்.

இதையடுத்து மாரிமுத்து பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் மகளின் குடும்ப பிரச்சனை தீரவில்லையாம். இதனால் மனமுடைந்த மாரிமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி