தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரம்: ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடியில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மாவட்ட நுண்ணறிவு குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்பி மதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நுண்ணறிவுத் தகவல்களைச் சேகரிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி