தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார், பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடுவது நல்ல தீர்வாக இருக்கும். பெட்ரோல்–டீசல் விலை உயர்வு உலகளாவிய காரணங்களால் தவிர்க்க முடியாதது. போர் நிலைமை சீரானால் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அமைச்சர்கள் தங்கள் துறையை முழுமையாக புரிந்துகொண்டு பேச வேண்டும். கூட்டணி ஆட்சி நீடிப்பது குறித்து கருத்து கூற முடியாது என்று அவர் கூறினார்.