தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், அனைத்து மக்களும் நன்றாக வாழக்கூடிய, ஊழல் மற்றும் கனிம வளக் கொள்ளை இல்லாத, அரசுப் பணியிடங்களுக்கு பணம் பெறாத ஆட்சி அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார். கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், புதிய தமிழகம் கட்சி பங்குபெறக்கூடிய கூட்டணியில் சேரும் என்றும் அவர் கூறினார்.