தூத்துக்குடி: மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்

தூத்துக்குடியில் மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். 

தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேம்பட்ட சிஎன்சி பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தெரிவித்தது: தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டும், தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாணவர்களின் தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு முதன்மை தொழில்நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி