தூத்துக்குடி: டாஸ்மாக் பாரில் திருடும் சிசிடிவி காட்சி

தூத்துக்குடியில் மதுபான கடை பாரில் மது பிரியர் ஒருவர் நைசாக பணத்தை திருடும் சிசிடிவி காட்சி: போலீசார் விசாரணை தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் அன்னை வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்தவர் கனிராஜா (55) இவர் தாளமுத்து நகர் அருகே பூப்பாண்டியாபுரத்தில் உள்ள மதுபான கடை அருகே பார் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கல்லாவில் ரூ.3 ஆயிரம் பணத்தை வைத்துவிட்டு வியாபாரத்தை கவனித்துள்ளார். அப்போது கடைக்கு வந்த மது பிரியர் ஒருவர் நைசாக அந்த பணத்தை எடுத்துச் சென்று விட்டார். பின்னர் பணம் திருடு போனதை அறிந்த கனிராஜா மர்ம நபர் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி