தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதி விபத்து; வாலிபர் பலி

தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்தவர் அந்தோணி (34). டிரைவர். இவர் பெட்ரோல் பங்கில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 15-ம் தேதி நள்ளிரவு 4-ஆவது ரயில்வே கேட் அருகே உள்ள பக்கிள் ஓடை பாலம் மங்களபுரம் விலக்கில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி